Skip to main content
நட்பு நாடுகளைக் குறைகூறிய அமெரிக்கா...காரணம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நட்பு நாடுகளைக் குறைகூறிய அமெரிக்கா...காரணம்?

வாசிப்புநேரம் -
அமெரிக்கா தனது நட்பு நாடுகள் இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவர்மீது தடைவிதித்திருப்பதைக் குறைகூறியுள்ளது.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, நார்வே, கனடா, நியூசிலந்து ஆகிய நாடுகள் அந்தத் தடைகளை விதித்துள்ளன.

அவற்றை மீட்டுக்கொள்ளும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ வலியுறுத்தியுள்ளார்.

நாடுகள் நேற்று தடைகள் குறித்து அறிவித்தன. மேற்குக்கரையில் வன்முறையைத் தீவிரமாக்குவதாக அவை அமைச்சர்கள்மீது குற்றஞ்சுமத்தின.

இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமார் பென்குவிர், நிதியமைச்சர் பென்ஸெலேல் ஸ்மோட்ரிச் ஆகிய இருவர்மீதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

"யார் உண்மையான எதிரி" என்பதை மறந்துவிட வேண்டாம் என்று திரு ருபியோ நட்பு நாடுகளிடம் சொன்னார்.

இத்தகைய தடைகளால் காஸா போர்நிறுத்த முயற்சிகளை முன்னெடுக்க முடியாது, போரை முடிவுக்குக் கொண்டுவரவும் முடியாது என்றார் அவர்.

இஸ்ரேலும் தடைகளைச் சாடியது. இந்தக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அது சொன்னது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்