சர்ச்சைக்குரிய காஸா மனிதாபிமான அறநிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்கும் அமெரிக்கா
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Hatem Khaled
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு, காஸா மனிதாபிமான அறநிறுவனத்திற்கு 30 மில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது.
மே மாதத்தில் செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து அறநிறுவனத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.
அத்தியாவசியப் பொருள்களைப் பெற விநியோக நிலையங்களுக்குச் சென்றவர்களில் சுமார் 550 பேர் தாக்குதலில் மாண்டதாக காஸா சுகாதார அமைச்சு கூறியது.
ஆனால் தனது விநியோக நிலையங்களில் அத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லை என்று அறநிறுவனம் கூறியது.
வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்டும் அதிபர் டிரம்ப்பின் முயற்சியின் ஒரு பகுதியாக நிதி கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகள் அதற்கு ஆதரவு வழங்கும்படியும் அது கேட்டுக்கொண்டது.
எனினும் முக்கிய மனிதாபிமான குழுக்களும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் அறநிறுவனத்துடன் இணைந்து செயல்பட மறுத்திருக்கின்றன.
துருப்புகளுடன் விநியோகத்தை ஒருங்கிணைப்பதன்-மூலம் அறநிறுவனம் அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறியிருப்பதாக அவை கூறின.