Skip to main content
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து - 67 பேரின் சடலங்களும் மீட்பு

வாசிப்புநேரம் -

வாஷிங்டனில் ராணுவ ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் மாண்ட 67 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

Potomac ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிகள் நடந்தன. ஒரு சடலத்தைத் தவிர மற்ற அனைத்தும் அடையாளங்காணப்பட்டதாய் அதிகாரிகள் கூறினர்.
 
பயணிகள் விமானத்தின் சிதைவுகளை மீட்கும் பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.
 
அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரின் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும். 

சம்பவத்தின்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

விபத்து குறித்து 30 நாள்களில் முதற்கட்ட அறிக்கை தயாராகிவிடும் என்று தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு எதிர்பார்க்கிறது. முழு விசாரணை நிறைவடைய ஓராண்டாகலாம்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்