Skip to main content
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தீச்சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தீச்சம்பவம் - காயமின்றித் தப்பிய 172 பயணிகள்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் டென்வர் (Denver) அனைத்துலக விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines)
விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்தது.

அதிலிருந்த 172 பயணிகளும் சிப்பந்திகளும் அவசரச் சறுக்குப் பாதையில் வெளியேற்றப்பட்டனர்.

விமான இறக்கையின் மீது பயணிகள் நின்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

எவருக்கும் காயமில்லை.

டாலஸ் (Dallas) செல்லவிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வு ஏற்பட்டதால் டென்வருக்குத் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு சொன்னது.

நுழைவாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டது. விசாரணை தொடர்கிறது.

 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்