Skip to main content
லாவோஸ் மதுபானச் சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

லாவோஸ் மதுபானச் சம்பவம் - ஆஸ்திரேலிய, அமெரிக்க இளையர்கள் மரணம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லாவோசில் Methanol எனும் நச்சுப் பொருள் கலந்த மதுபானத்தை அருந்திய ஆஸ்திரேலியாவின் இளம்பெண் ஒருவர் மாண்டார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

மதுபான நச்சு சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை நான்கிற்கு அதிகரித்துள்ளது.

பியன்கா ஜோன்ஸ் (Bianca Jones) எனும் அந்த 19 வயதுப் பெண் லாவோஸிலிருந்து சிகிச்சைக்காக தாய்லந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் மாண்டார். அவரது சக வயதுத் தோழி தாய்லந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் சொன்னார்.

அவருக்குச் செயற்கை சுவாசக் கருவிப் பொருத்தப்பட்டுள்ளது.

அந்த 2 ஆஸ்திரேலியப் பெண்களும் நவம்பர் 13ஆம் தேதி மதுபானம் அருந்திய பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதற்குமுன்னர் மாண்ட மூவரில் இருவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அமெரிக்கர்.

லாவோஸின் வாங் வியேங் நகரில் மதுபானம் குடித்த மேலும் 10 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ABC தொலைக்காட்சி கூறுகிறது.

நியூசிலந்தைச் சேர்ந்த ஒருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கும் மதுபானம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்