Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரத்தான விமானச் சேவை.... தவற இருந்த திருமணம்... நடந்தேறியது விமானத்தில்...

வாசிப்புநேரம் -
ரத்தான விமானச் சேவை.... தவற இருந்த திருமணம்... நடந்தேறியது விமானத்தில்...

படம்: Jumlah perkahwinan Muslim di Singapura tidak jatuh mendadak semasa pandemik COVID-19. (Gambar hiasan: Drew Coffman/Unsplash)

அமெரிக்காவில் ஒரு திருமண ஜோடி தாங்கள் செல்ல வேண்டிய விமானச் சேவை ரத்தான காரணத்தால் வேறொரு விமானத்தில் தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

சுமார் 37,000 அடி உயரத்திற்குத் தங்கள் காதலைக் கொண்டு சென்று மணம் முடித்துள்ளனர்.

லாஸ் வேகாஸில் உள்ள தேவாலயத்திற்கு நேரத்தோடு செல்ல முடியவில்லையே என்ற கவலை நீங்கியது.

விமானம் ஒரு தற்காலிக தேவாலயம் ஆனது. கழிவறைக் காகிதங்கள் அலங்காரப்பொருட்களாகின. விமானப் பணிப்பெண் மணமகள் தோழி ஆனார். Donut திருமணக் கேக்கானது.

பயணிகள் புகைப்படக் கலைஞர்களாகவும், உறவினர்களாகவும் மாறினர்.

மணமக்கள் 2020ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். ஒரு சில விமான நிறுவனங்கள் இனி விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளதாகக் கேள்விப்பட்டதும் லாஸ் வேகாஸ்(Las Vegas) பறந்து சென்று திருமணம் செய்ய எண்ணியதாக மணமக்கள் CNN-இடம் தெரிவித்தனர்.

மணமகள் ஒரே இரவில் இணையம் வழி தனது திருமண ஆடையையும் வாங்கியிருக்கிறார்.

திருமண உடையோடு டல்லாஸ் பறந்தனர் மணமக்கள்... ஆனால் அங்கிருந்து லாஸ் வேகாஸுக்கு மாறிச் செல்ல வேண்டிய விமானச் சேவை ரத்தானது.

கவலையோடு உரையாடிக்கொண்டிருந்த மணமக்களுக்கு கிடைத்தது ஒரு நற்செய்தி. லாஸ் வேகாஸ் செல்லும் இறுதி விமானம் இன்னும் 50 நிமிடத்தில் புறப்பட உள்ளதாக வந்தது தகவல்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பறக்க முடிவு செய்தனர் மணமக்கள்.

திருமண ஆடையோடு விரைந்த மணமக்களைக் கண்ட விமானி அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்ததாகச் சொன்னது CNN.


விளைவு, தேவாலயத்திற்குச் செல்லத் தேவைப்படாமல் விமானத்திலேயே விழாக்கோலத்துடன் திருமணம் நடந்தேறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa