Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வெனிசுவேலாவில் முதலீடு செய்ய வேண்டுமா? தயங்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்

வாசிப்புநேரம் -
வெனிசுவேலாவில் முதலீடு செய்ய வேண்டுமா? தயங்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்
படம்: Reuters/Carlos Garcia Rawlins
வெளியீடு : 10 Jan 2026 10:56AM புதுப்பிப்பு : 10 Jan 2026 02:09PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவில் பில்லியன் கணக்கான டாலர் முதலீடு செய்யவேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்துகிறார்.

ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுவேலாவில் முதலீடு செய்வது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

உலகிலேயே ஆக அதிகம் கச்சா எண்ணெய் இருப்பு வைத்துள்ள நாடு வெனிசுவேலா. அங்கு நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்க்கும் குறைவாகவே எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வெனிசுவேலா 30 இலிருந்து 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கும் என்று முன்னதாக வாஷிங்டன் கூறியது.

வெனிசுவேலாவுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க கரீபியக் கடலில் ஐந்தாவது எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியிருக்கிறது.

வெனிசுவேலாவின் தற்போதையச் சூழல் முதலீட்டுக்கு உகந்ததல்ல என்கிறார் ExxonMobil தலைமை நிர்வாக அதிகாரி டேரன் வுட்ஸ் (Darren Woods).

சிறந்த சட்டச் சீர்திருத்தமும் எண்ணெய் நிறுவனங்களின் முதலீட்டுக்குப் பாதுகாப்பும் தேவை என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்