பாதுகாப்புக் காரணங்களுக்காக மெக்சிக்கோவுக்குப் பயணம் செய்யவேண்டாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
வாசிப்புநேரம் -

(படம்:unsplash)
அமெரிக்காவின் டெக்சஸ் மாநில (Texas) அதிகாரிகள் வசந்தகால விடுமுறையில் மெச்சிக்கோவுக்குப் பயணம்மேற்கொள்ள் வேண்டாம் என்று அமெரிக்கக் குடிமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மெக்சிக்கோவுக்குச் செல்வோருக்குப் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகள் பெரும் மிரட்டலாக இருப்பதாக டெக்சஸ் மாநில பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டது.
மெக்சிக்கோவில் உள்ள சந்தையில் துணிகள் விற்பதற்காகச் சென்ற 3 பெண்கள் இரண்டு வாரத்திற்கு மேல் காணவில்லை என்ற தகவலை அடுத்து டெக்சஸ் மாநில பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் அறிக்கை வெளிவந்துள்ளது.
இவ்வாரத் தொடக்கத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக மெக்சிக்கோவுக்குச் சென்ற 2 அமெரிக்கர்கள் உள்ளூர்க் குற்றவியல் கும்பலால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர் கும்பலைச் சேர்ந்த 5 பேரை விடுதலை செய்த பின்னர் பிணை பிடிக்கப்பட்டிருந்த 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.