"கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்து - வெளிநாட்டு ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள்"
வாசிப்புநேரம் -
(படம்: AP)
கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் வெளிநாட்டு ஊழியர்களைத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கத் தவறியதாக Amnesty International அமைப்பு புதிய அறிக்கையில் சாடியிருக்கிறது.
அந்தப் போட்டிக்காகக் குறுகியகால ஒப்பந்தங்களின்கீழ் வேலைக்கு எடுக்கப்பட்ட சிலர் நடத்தப்பட்ட விதத்தை அமைப்பு ஆராய்ந்தது.
நீண்ட நேரம் வேலை செய்த நூற்றுக்கணக்கானோர் சம்பளம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அவர்களில் நேப்பாளம், கென்யா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 ஆடவர்களிடம் அமைப்பு பேசியது.
உலகக் கிண்ணப் போட்டியில் வேலை செய்யும்போது ஏற்பட்ட ஆதங்கத்தைப் பற்றிக் கடந்த நவம்பர் மாதம் பலர் புகார் செய்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அமைப்பு சொன்னது.
ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனம் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட அரங்கங்களைக் கட்டச் சுமார் 30,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டதாகக் கத்தார் அரசாங்கம் சென்ற ஆண்டு (2022) தெரிவித்திருந்தது.