Skip to main content
"அமெரிக்காவுக்கு என்ன தேவையோ அதை முதலில் செய்வேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

"அமெரிக்காவுக்கு என்ன தேவையோ அதை முதலில் செய்வேன்" - டிரம்ப்பின் அதிரடித் திட்டங்கள் குறித்து அரசியல் கவனிப்பாளர்கள்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பொறுப்பேற்ற திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) பதவியேற்றவுடன் பல உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜோ பைடன் முன்னர் கையெழுத்திட்ட சுமார் 80 உத்தரவுகளை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் திரு டிரம்ப் கூறியிருக்கிறார்.

அவருடைய அதிரடித் திட்டங்கள் குறித்து அரசியல் கவனிப்பாளர்கள் தங்கள் கருத்துகளைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

"சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க வேண்டும்"

கடந்த சில ஆண்டுகளில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. அதைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்குச் சிரமமிருந்ததாக அரசியல் ஆர்வலர் இளங்கோ மெய்யப்பன் தெரிவித்தார்.

வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பவும் அவர்களை வெளியேற்றவும் திரு டிரம்ப் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார்.

"திறன் இடைவெளியைச் சமாளிக்க வெளிநாட்டினரை வரவழைப்பது முக்கியம். ஆனால் அவர்களைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். டிரம்ப் அமெரிக்காவுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் எடுத்த முடிவுக்கு அமெரிக்கர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்," என்றார் திரு மெய்யப்பன்.

"அமெரிக்காவின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை"

கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதிக்கு 25 விழுக்காடு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் திரு டிரம்ப் கூறியிருந்தார். இதனால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களைத் திரு டிரம்ப் வைத்திருப்பதாக அரசியல் நோக்கர் மஹாதேவன் 'செய்தி'யுடன் பகிர்ந்தார்.

திரு பைடனின் நிர்வாகத்தின்போது வாழ்க்கைச் செலவினம் அதிகரித்தது, சட்டவிரோத குடியேற்றம் கூடியது. நிலைமை மேலும் மோசமடையலாம் என்று அச்சமடைந்த மக்கள் அதற்குத் தீர்வு காணவே திரு டிரம்ப்புக்கு வாக்களித்ததாகவும் அவர் பதவியேற்றவுடன் அறிவித்த பல திட்டங்களுக்கு முழு மனத்தோடு ஆதரவளித்ததாகவும் அவர் சொன்னார்.

திரு டிரம்ப் அறிவித்த வேறு சில திட்டங்களில் உடன்பாடு இல்லையென்றாலும்கூட அமெரிக்காவின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பலர் அவர் பக்கம் நிற்பதாக இருவரும் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்