Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"ஆதரவுக்கு நன்றி" - ஆனந்த கிருஷ்ணன் பிள்ளைகள் உருக்கம்

வாசிப்புநேரம் -
மலேசியச் செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணனின் பிள்ளைகள் மறைந்த தங்கள் தந்தையின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர்.

திரு ஆனந்த கிருஷ்ணன் 2 நாளுக்கு முன்னர் (28 நவம்பர்) காலமானார்.

கடைசிக் காலத்தில் தமக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தவர்களை அவர் அடிக்கடி நினைவுகூர்ந்ததாக பிள்ளைகள் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு ஆனந்த கிருஷ்ணன் சில காலமாக நுரையீரல் பாதிப்பால் அவதியுற்று வந்ததாகப் பிள்ளைகளை மேற்கோள்காட்டி The Star செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவிலுள்ள பல பெரும் தொழில்நிறுவனங்களுக்கு அதிபதியான திரு ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 25.7பில்லியன் ரிங்கிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் 3ஆவது பெரிய செல்வந்தராகவும் அவர் திகழ்ந்தார்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்