செல்வந்தரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பழமையான கலைப்பொருள்கள்... அவற்றின் மதிப்பு... $20 மில்லியனுக்கும் அதிகம்!

(படம்: AP Photo/Andrew Medichini)
அமெரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட 60 பழமையான கலைப்பொருள்களை இத்தாலி காட்சிக்கு வைத்துள்ளது.
அவற்றின் மதிப்பு 20 மில்லியன் டாலருக்கும் அதிகம். ரோமின் Spadolini அரங்கில் அவை வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை செல்வந்தர் மைக்கல் ஸ்டீன்ஹார்ட்டின் (Micheal Steinhardt) தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து கைப்பற்றப்பட்டவை என்று மான்ஹாட்டன் பழம்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட கலைப்பொருள்களில் சில ஈராயிரம் ஆண்டுப் பழமையானவை என்று கூறப்படுகிறது.
2021இல் ஸ்டீன்ஹார்ட்டின் தனிப்பட்ட கலைப்பொருள் தொகுப்பிலிருந்து 70 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனால் பழமைவாய்ந்த கலைப்பொருள்களை வாங்க அவருக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது.