விக்டோரியா பெக்கமின் நிகழ்வில் அத்துமீறி நுழைந்த விலங்குநல ஆர்வலர்கள்
வாசிப்புநேரம் -
(படம்: Reuters/Gonzalo Fuentes)
காற்பந்துப் பிரபலம் டேவிட் பெக்கமின் (David Beckham) மனைவி விக்டோரியா பெக்கம் (Victoria Beckham) நடத்திய ஆடை அலங்கார அணிவகுப்பில் விலங்குநல ஆர்வலர்கள் நுழைந்து இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
Paris Fashion Week என்ற அந்த நிகழ்வில் மாடல் அழகிகள் நடந்துவரும் நடைபாதைக்குள் ஆர்வலர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
"Viva Vegan Leather" என்று எழுதியிருந்த பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்; விலங்குகள் ஒன்றும் துணிகள் அல்ல என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் விக்டோரியா பெக்கம் உரையாற்றும்போது மற்றோர் ஆர்வலர் அதே பதாகையுடன் நடைபாதைக்குள் நுழைந்தார் என்று Reuters செய்தி வெளியிட்டது.
எனினும் பாதுகாவலர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
நிகழ்வில் விக்டோரியாவின் கணவர் டேவிட் பெக்கமும் அவரது பிள்ளைகளும் இருந்தனர்.
மார்ச் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ள Paris Fashion Week நிகழ்வில் Chanel, Dior, Hermes, Louis Vuitton ஆகிய பிரபல நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

ஆதாரம் : Reuters