கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியாவுக்கு அருகே இன்னொரு திடீர்ப்பள்ளம்
வாசிப்புநேரம் -
சென்ற ஆண்டு கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் திடீர்ப்பள்ளம் ஏற்பட்ட இடத்துக்கு அருகே திடீரென இன்னொரு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
சென்ற ஆண்டு திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதற்கான விசாரணை முடிவை அதிகாரிகள் வெளியிட்ட இரண்டு வாரத்தில் அதே வட்டாரத்தில் இன்னொரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மலேசிய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.
இன்று காலை சுமார் 8.40 மணிக்கு ஜாலான் போனஸ் (Jalan Bonus) எனும் இடத்தில் பம்பாய் நகைக்கடைக்கு வெளியே திடீர்ப்பள்ளம் ஏற்பட்டது.
நகரத்தின் கட்டுமான அடித்தளம் குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ளதாக The Star ஊடகம் தெரிவித்தது.
பாதுகாப்புக் காரணமாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் தற்போது எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. உரிய சோதனைகள் நடத்தப்படும் என்று கோலாலம்பூர் நகரமன்றம் அறிவித்தது.
சாக்கடைக் குழாய்கள் அரித்துப்போனதே சென்ற ஆண்டு திடீர்ப் பள்ளம் ஏற்படக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.
அந்தப் பள்ளத்தில் இந்தியப் பெண்மணி 48 வயது திருமதி விஜயலக்ஷ்மி விழுந்தார்.

ஆதாரம் : Others