Skip to main content
தீர்க்கப்படாத கொலை வழக்கில் பொய்த் தகவல் தந்த AI
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தீர்க்கப்படாத கொலை வழக்கில் பொய்த் தகவல் தந்த AI

வாசிப்புநேரம் -
தீர்க்கப்படாத கொலை வழக்கில் பொய்த் தகவல் தந்த AI

படம்: REUTERS

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவில் தீர்க்கப்படாத கொலை வழக்கு ஒன்றைப் பற்றி AI பொய்த் தகவல் அளித்த சம்பவத்தின் கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் உருவாக்கிய AI மாதிரி, பிலடெல்பியா (Philadelphia) காவல்துறைக்கு அந்தத் தகவலை அனுப்பியது.

ஜூலை 18ஆம் தேதி PhillyUnsolvedMurders.com இணையத்தளத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டது. முடிவுக்கு வராத கொலைச்சம்பவகள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் அங்கு பகிரலாம்.

அந்த AI மாதிரி முறையற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இணையத்தளங்களுடன் (Random) தொடர்புகொள்ளும் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரம் அது.

அது அந்த இணையத்தளத்தை அடைந்து, தீர்க்கப்படாத கொலை குறித்துப் பொய்த் தகவலைச் சமர்ப்பித்ததாக ஆந்த்ரோபிக் கூறியது.

வழக்குக் குறித்த தகவல் தெரிந்தவரைப்போல் AI தன்னைக் காட்டிக்கொண்டது.

எனினும் அந்தத் தகவல் தேவையற்ற பதிவு என அடையாளம் காணப்பட்டது. காவல்துறையின் குற்றக் கண்காணிப்பு நிலையத்திற்கும் அது செல்லவில்லை.

செப்டம்பர் 28ஆம் தேதி சம்பவத்தை ஆந்த்ரோபிக் கண்டறிந்தது. சம்பந்தப்பட்ட தானியக்கச் சோதனையை நிறுத்திச் சரிபார்க்கும் நடவடிக்கையையும் சேர்த்தது.

அக்டோபர் 7ஆம் தேதி காவல்துறையிடம் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இருதரப்பும் மறுநாள் சந்தித்தன.

சம்பவத்தைக் கண்டறிந்து தெரிவிக்க இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காவல்துறை சாடியது.

இத்தகைய சம்பவங்கள் குறித்து ஆந்த்ரோபிக் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதன் Claude மாதிரிகள் எதிர்பாராச் செயல்களில் ஈடுபடுவதாக அது கூறியது.

தற்போது Claude இணையத்தளங்களை அணுக முடியாதபடி நிறுவனம் தடுத்து வைத்திருக்கிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்