"தென் கொரியாவில் அரசியல் நிலைத்தன்மை வேண்டும்"
வாசிப்புநேரம் -
JONATHAN ERNST / POOL / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென் கொரியாவில் அரசியல் நிலைத்தன்மை வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரத்துவப் பயணமாக சோல் சென்றுள்ள அவர் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சா தெ யூ யுலைச் (Cho Tae-yul) சந்தித்துப் பேசுவார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராகத் திரு பிளிங்கன் மேற்கொள்ளும் கடைசித் தென் கொரியப் பயணமாக அது அமையலாம்.
தென் கொரியாவில் பல்லாண்டு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது.
அதிபர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள திரு யூன் சுக் இயோலைத் (Yoon Suk Yeol) திரு பிளிங்கன் சந்திக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
தற்போதுள்ள இக்கட்டான சூழலில் திரு பிளிங்கன் எந்தத் தரப்புக்கும் ஆதரவு காட்டுவதைத் தவிப்பார் என்று தெரிகிறது.
இருதரப்புக் கொள்கைகளைத் தொடர்வதில் திரு. பிளிங்கன் கவனம் செலுத்துவார்.
பிறகு அவர், ஜப்பானுக்கும் பிரான்சுக்கும் செல்லவிருக்கிறார்.

ஆதாரம் : Others