Skip to main content
ஜொகூர் பள்ளியில் 16 வயது மாணவி மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் பள்ளியில் 16 வயது மாணவி மரணம் - விசாரணை தீவிரம்

வாசிப்புநேரம் -
ஜொகூர் பள்ளியில் 16 வயது மாணவி மரணம் - விசாரணை தீவிரம்

படம்: Facebook/Anwar Ibrahim

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூரின் யோங் பெங் (Yong Peng) பகுதியில் உள்ள பள்ளியில் மாணவி இறந்து கிடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) உத்தரவிட்டுள்ளார்.

உடனே வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.

குற்றம் நடந்ததாகத் தெரியவந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

அந்த 16 வயது மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர் அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விசாரணைக்காக 6 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணம், மாணவி எப்படி உயிரிழந்தார் என்ற விசாரணை தொடர்கிறது.

மாணவியின் உடலில் தலை உள்ளிட்ட சில பகுதிகளில் காயங்கள் இருந்ததாக ஜொகூர் காவல்துறை சொன்னது.

கைது செய்யப்பட்ட மாணவருக்கு இதற்கு முன்பு குற்றப்பதிவு இல்லை என்றும் கூறப்பட்டது.

அவரைக் கைது செய்த பிறகு கைத்தொலைபேசி, உடைகள், காலணிகள் ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது.

பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆராயப்படுகின்றன.

கவனக்குறைவு அல்லது உரியவர்கள் கடமையைச் செய்யத் தவறியது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்