நிலநடுக்கத்திலும் கட்டுக்குலையாத மூன்று மாடிக் கட்டடம்
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
வெனிசுவேலாவின் லா குவைரா (La Guaira) நகரில் ஓர் அதிசயம்.
சுற்றிலும் இடிபாடுகள்.
அதற்கு மத்தியில் தனித்து நிற்கிறது மூன்று மாடிக் கட்டடம்.
அது கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால் நாட்டையே உலுக்கிய நிலநடுக்கங்களில் அந்தக் கட்டடம் தாக்குப்பிடித்தது.
நிலநடுக்கத்திலும் நிலைகுலையாமல் இருக்க கட்டடத்தின் உயரம் ஒரு முக்கியக் காரணம் என்று அதைக் கட்டிய தந்தையும் மகனும் நம்புகின்றனர்.
இருவரின் பெயரும் எலியாஸ்.
கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், நகரின் நிலப்பரப்பிற்கு ஏற்ப நிறுவப்பட்ட அடித்தளம் உள்ளிட்ட மற்ற காரணங்களையும் அவர்கள் சுட்டினர்.
கட்டடத்தில் ஆறு வீடுகள்.
சில சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
ஆனால் அடித்தளம் அப்படியே இருந்தது.
சன்னல்கள், படிக்கட்டுகள், தூண்கள் ஆகியவையும் அடிவாங்கவில்லை.
மிக முக்கியமாகக் குடியிருப்பாளர்கள் யாருக்கும் காயம் இல்லை.
லா குவைரா நகரின் நிலப்பரப்பு உயரமான கட்டடங்களுக்குப் பொருத்தமானவை அல்ல என்று மூத்த எலியாஸ் கூறினார்.

ஆதாரம் : AFP