Skip to main content
ஏரி ஒன்று... பெயர்கள் இரண்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஏரி ஒன்று... பெயர்கள் இரண்டு

வாசிப்புநேரம் -
ஏரி ஒன்று... பெயர்கள் இரண்டு

(படம்: REUTERS/Evan Vucci)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Apple நிறுவனம் அதன் வரைப்படத்தில் ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' (Lake America) என்று மாற்றியுள்ளது.

அமெரிக்கப் பயனீட்டாளர்கள் 'லேக் அமெரிக்கா' என்ற பெயரைக் காண்பர் என்று Apple தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஏரியின் பெயரை மாற்றுமாறு உத்தரவிட்டதை அடுத்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.

கனடாவில் உள்ளவர்கள் தொடர்ந்து வரைபடத்தில் ஒன்டாரியோ ஏரி என்ற பெயரையே காண்பர்.

உலகில் மற்ற எல்லாரும் இரு பெயர்களையும் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் கூகள் நிறுவனமும் அதன் வரைபடத்தில் ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என்று மாற்றியது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கனடிய பொருள்கள் மீதான வரியையும் திரு டிரம்ப் சென்ற வாரம் அதிகரித்தார்.

ஏரியின் பெயர் மாற்றத்தைக் கனடிய பிரதமர் மார்க் கார்னி நிராகரித்தார்.

சுமார் 400 ஆண்டாக ஒன்டாரியோ ஏரி என்று அழைக்கப்படுகிறது. அதை மாற்றப்போவதில்லை என்று அவர் கூறினார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்