புதிய iPhone 17 - விலையில் மாற்றமில்லை
வாசிப்புநேரம் -
(படம்: JUSTIN SULLIVAN / GETTY IMAGES NORTH AMERICA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Apple நிறுவனம் அதன் iPhone 17 ரக திறன்பேசிகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வரிகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய திறன்பேசி வந்துள்ளது.
இம்முறை புதிதாக iPhone 17 Air அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதுவே Apple நிறுவனத்தின் ஆக மெல்லிய திறன்பேசி... 0.56 சென்டிமீட்டர் மொத்தம் தான்.
அதன் மின்கலம் (battery) 24 மணி நேரம் நீடிக்கும்.
புத்தம் புதிய A19 Pro processor சில்லு கொண்டுள்ள அதன் விலை 999 டாலர்.
அதோடு iPhone 17 Pro திறன்பேசியும் வெளியீடு கண்டுள்ளது. அதன் விலை 1,099 டாலரில் தொடங்கும்.

iPhone 17 திறன்பேசியின் விலை சென்ற ஆண்டைப் போல் 799 டாலரில் தொடங்கும்.
அமெரிக்க வரிகளால் செலவுகள் அதிகரித்திருந்தாலும் Apple நிறுவனம் விலையில் மாற்றம் செய்யவில்லை.
விலை அறிவிக்கப்பட்ட பின்னர் Apple நிறுவனத்தின் பங்குவிலை 1.4 விழுக்காடு சரிந்தது.
விலையில் மாற்றமில்லாததால் நிறுவனத்தின் லாபம் பாதிக்கப்படலாம் என்று முதலீட்டாளர்களிடையே அச்சம் நிலவுகிறது.
AirPods Pro 3, Apple Watch Series 11 ஆகிய கருவிகளும் வெளியீடு கண்டன.

ஆதாரம் : AGENCIES