Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அரை மில்லியன் பேருக்கு 4ஆம் தடுப்பூசி போட்டது இஸ்ரேல்

வாசிப்புநேரம் -

இஸ்ரேலில் 500,000க்கும் அதிகமானோருக்கு நாலாம் முறையாகத் தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலிய மக்களில் நோய்த்தொற்றினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு நாலாம் தடுப்பூசி போடும் பணிகள் சென்ற மாதத்தின் இறுதிப் பகுதியில் தொடங்கின. 

கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மக்களிடையே ஓமக்ரான் வகைக் கிருமித்தொற்று ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலியச் சுகாதார அமைச்சு வழங்கிய தரவுகளின்படி, இப்போது 260,000க்கும் மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அவர்களில் 289 பேருக்கு மட்டுமே கடுமையான நோய் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. 

இதற்குமுந்திய கட்டக் கிருமிப்பரவலைக் காட்டிலும் அது கணிசமாகக் குறைவு. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்