10,000 ஆண்டுக்கு முந்திய பாறை ஓவியங்கள்
வாசிப்புநேரம் -
எகிப்தின் சினாய்த் தீபகற்பத்தில் 10,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களைக் கொண்ட ஒரு தளத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓவியங்கள் சுமார் 100 மீட்டர் நீளமான பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கலை வெளிப்பாட்டின் பரிணாம வளர்ச்சியை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று ரீதியாகவும், கலை ரீதியாகவும் கண்டுபிடிக்கப்பட்ட தளத்திற்கு அதிக மதிப்பு இருப்பதாக எகிப்தின் சுற்றுலாத் துறை சொன்னது.
காலப்போக்கில் மனிதச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், பொருளாதார நடவடிக்கைகளைப் பாறை ஓவியங்கள் வழி அறிந்துகொள்ள முடியும்.
இதனாலேயே தளம் ஒரு திறந்தவெளி அரும்பொருளகம் என்று பாராட்டப்பட்டது.
தளத்தை ஆழமாக ஆராய்ந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அது பல காலம் ஓர் அடைக்கல முகாமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.
அண்மை கண்டுபிடிப்பு எகிப்தியத் தொல்பொருள் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : AFP