இனி பனி இல்லாத ஆர்க்டிக் துருவம்?
ஆர்க்டிக் துருவத்தில் உலக வெப்பமயமாதலால் இனி ஆண்டுக்கு ஒரு முறை கோடைக்காலத்தில் பனிக்கட்டிகள் இல்லாத சூழல் ஏற்படக்கூடும்.
அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆராய்ச்சியில் அது தெரியவந்துள்ளது.
முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் பத்தாண்டுகளுக்கு முன்பே அங்குப் பனிக்கட்டிகள் இல்லாமல் போகக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆர்க்டிக் துருவத்தில் பனிப்படலங்கள் எவ்வளவு வேகமாகக் குறைகின்றன என்பதை முன்னுரைக்கக் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட தரவுகள் மறுஆய்வு செய்யப்பட்டன.
2050க்குள் ஆர்க்டிக் துருவத்தில் ஒரு மாதம் முழுதும் பனிப்படலம் அறவே இல்லாமல் போகக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.