Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மெக்சிகோவில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் 11 பேர் மாண்டனர், 12 பேருக்குக் காயம்

வாசிப்புநேரம் -
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் 11 பேர் மாண்டனர், 12 பேருக்குக் காயம்
படம்: AFP
மெக்சிகோவில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் குறைந்தது 11 பேர் மாண்டனர்; மேலும் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது.

மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில் இருக்கும் காற்பந்துத் திடலில் நேற்று தாக்குதல் நடந்தது.

தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாக மேயர் அலுவலகம் தெரிவித்தது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேருக்குத் தற்போது மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அதே வட்டாரத்தில் மனித உடல் பாகங்கள் அடங்கிய 4 பைகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் உள்ள கும்பல்களுக்கு இடையே தொடரும் மோதல் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குவானாஜுவாடோ ஒரு வளர்ந்துவரும் தொழில்துறை நடுவம்; சுற்றுப்பயணிகள் பலரை ஈர்க்கும் பல பிரபலமான சுற்றுலாத்தலங்களும் அங்கு இருக்கின்றன.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்