முடிசூடும் ஆர்சனல்
படம்: GLYN KIRK / AFP
ஆர்சனல் (Arsenal) 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளது.
இது அணி கைப்பற்றிய 14ஆவது லீக் பட்டம்.
இதன்வழி இங்கிலாந்து காற்பந்து வரலாற்றில் அதிகப் பட்டங்களை வென்ற அணிகளில் ஒன்றாக ஆர்சனல் திகழ்கிறது.
ஆர்சனலுக்கு இப்பருவத்தில் இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ளது.
ஆனால் புள்ளிப் பட்டியலில் அது 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறது.
அது தற்போது 82 புள்ளிகள் வைத்துள்ளது.
இரண்டாம் இடத்தில் 78 புள்ளிகளுடன் மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) உள்ளது.
இன்று காலை போர்ன்மெத்துக்கு (Bournemouth) எதிரான ஆட்டத்தில் சிட்டி1-1 என சமநிலை மட்டுமே கண்டது.
இதையடுத்து 3 புள்ளிகளைப் பெறத் தவறியது; ஆர்சனலுக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பையும் இழந்தது.
எஞ்சியுள்ள ஓர் ஆட்டத்தில் வெற்றிபெற்றால்கூட சிட்டி ஆர்சனலை முந்த முடியாது.
இதற்குமுன்னர் 2003-2004 பருவத்தில் ஆர்சன் வெங்கர் (Arsene Wenger) அணி நிர்வாகியாக இருந்தபோது ஆர்சனல் கடைசியாக இங்கிலீஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வென்றது.