உணவகத்திற்குத் தீ மூட்ட முயன்ற ஆடவரின் கால்சட்டையில் பற்றிய தீ

Handout / VICTORIA POLICE/AFP
"தன் வினை தன்னைச் சுடும்" என ஒரு பழமொழி உண்டு.
அதற்கேற்ப ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் (Melbourne) நகரில் ஓர் உணவகத்திற்குத் தீ மூட்ட முயன்ற ஆடவரின் கால்சட்டை தீப்பிடித்தது.
அந்த ஆடவர் மற்றொரு நபருடன் முகம் தெரியாதவாறு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயன்றார்.
அப்போது எதிர்பாரா விதமாக அவரது கால்சட்டையில் தீப்பற்றியது. பதறிய ஆடவர் கால்சட்டையைக் கழற்றியவாரு உடன் வந்த நபருடன் அங்கிருந்து தப்பியோடினார்.
அது கடைக்கு வெளியே பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவானதாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் சென்ற ஆண்டு (2024) கிறிஸ்துமஸ் தினம் அதிகாலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்தைக் கண்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.