Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கம்போடியாவில் ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டம் முடிவுக்கு வந்தது

வாசிப்புநேரம் -

கம்போடியத் தலைநகர் புனோம் பென்னில் (Phnom Penh) நடைபெற்ற ஒருவார ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது. 

தைவானிய, உக்ரேனிய விவகாரங்கள் அதிகக் கவனத்தை எடுத்துக்கொண்டன.

அமெரிக்க, சீன, ரஷ்ய உயர்நிலை அரசதந்திரிகள் அந்த விவகாரங்களில் கவனம் செலுத்தினர். 

மியன்மார் நிலவரமும் விரிவாகப் பேசப்பட்டது. 

மியன்மாரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 

முன்னைய  தலைவரான 77 வயது ஆங் சான் சூச்சியை ராணுவம் சிறையில் அடைத்திருக்கிறது. 

மியன்மார் அரசாங்கம் ஆசியான் மாநாட்டில் பங்குபெறவில்லை.

இவ்வாண்டு நவம்பர் மாதத்துக்குள் அது அமைதி முயற்சியில் முன்னேற்றம் காட்டவேண்டும் என்று ஆசியான் அதற்குக் காலக்கெடு விதித்திருக்கிறது. 

அடுத்த ஆண்டு தேர்தலை நடத்தப்போவதாக மியன்மார் ராணுவ அரசாங்கம் அறிவித்திருக்கிறது. 

ஆனால் அது நேர்மையான தேர்தலாக இருக்காது என்று அமெரிக்கா கூறியது. 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்