Skip to main content
புகைமூட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புகைமூட்டம் - ஆசியான் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
புகைமூட்டம் - ஆசியான் எச்சரிக்கை

(படம்: REUTERS/Abriansyah Liberto)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கிழக்காசியாவில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் அபாயம் ஆக அதிகமாக இருப்பதாய் ஆசியான் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் எரியும் காட்டுத்தீயிலிருந்து எழும் புகை, அண்டை நாடுகளுக்குப் பரவுகிறது.

கலிமந்தானுக்கு அருகில் இருக்கும் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் சில இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அபாயகரமான அளவான 300 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கில் அது 400ஐக் கடந்தது.

சரவாக் முழுவதும் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானோர் காற்றுத் தூய்மைக் கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் சபா மாநிலத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

காற்றின் தரம் மோசமடைவதால் நாட்டில் ஆஸ்துமா, கண் அழற்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மலேசியச் சுகாதார அமைச்சு கூறியது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்