Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கில் சிக்கியிருப்போரை வெளியேற்றுவதில் ஆசிய நாடுகள் தீவிரம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிய நாடுகள் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள தங்கள் குடிமக்களை வெளியேற்றும் வழிகளை ஆராய்கின்றன.

21,000 தென்கொரியர்கள் மத்திய கிழக்கில் சிக்கியுள்ளனர்.

அவர்களை தென்கொரியாவுக்குத் திரும்ப அனுப்பவேண்டும்;

அல்லது பாதுகாப்பான வேறு நாடுகளுக்கு அனுப்பிவிடுமாறு தென்கொரிய வெளியுறவு அமைச்சு கேட்டுள்ளது.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தனது அரை மில்லியன் குடிமக்கள் மத்திய கிழக்கில் இருப்பதாகக் கூறியுள்ளது.

சவுதி அரேபியாவுக்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரிகர்களால் இந்தோனேசியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருக்கலாமெனச் சொல்லப்படுகிறது.

மத்திய கிழக்கில் சுமார் 1,400 பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் சிக்கிக்கொண்டுள்ளனர்.

நில, ஆகாய வழிகள் மூடப்பட்டிருப்பதால் அங்கேயே இருக்குமாறு பிலீப்பீன்ஸ் ஊழியர்களை அதிபர் பெர்டினான்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr.) கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்