Skip to main content
ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப் பதக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப் பதக்கம் - ஜப்பானுக்கு

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப் பதக்கம் - ஜப்பானுக்கு

AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 20 Sep 2026 10:06AM புதுப்பிப்பு : 20 Sep 2026 01:06PM

ஆசிய விளையாட்டுகளின் முதல் தங்கப் பதக்கத்தை ஜப்பானின் தக்குமி ஹோஜோ (Takumi Hojo), triathlon எனும் மூவகைப் போட்டியில் வென்றுள்ளார். 

நீச்சல், சைக்கிளோட்டம், ஓட்டம் என மூன்று விளையாட்டுகள் சேர்ந்து இடம்பெறும் போட்டி அது. 

750 மீட்டர் நீச்சல்... 

20 கிலோமீட்டர் சைக்கிளோட்டம்...

5 கிலோமீட்டர் ஓட்டம்.

ஹோஜோ 52 நிமிடம் 56 வினாடிகளில் போட்டியை முடித்துத் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

தமது வெற்றி ஜப்பானிய அணிக்குப் பெரிய உந்துதலாக அமையும் என்று ஹோஜோ கூறினார்.

சீனா வெள்ளியையும் கஸக்ஸ்தான் (Kazakhstan) வெண்கலத்தையும் வென்றன.

20ஆவது முறையாக நடைபெறும் ஆசிய விளையாட்டுகளை ஜப்பான் ஏற்று நடத்துகிறது.

நேற்று அயிச்சி (Aichi) வட்டாரத்தின் நகோயா (Nagoya) நகரில் தொடக்கநிகழ்ச்சி இடம்பெற்றது.

30,000 பேர் அமரக்கூடிய Paloma Mizuho அரங்கில் அது பிரமாண்டமாக நடந்தேறியது.

ஆசிய விளையாட்டுகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை தொடரும்.

17,000க்கும் அதிகமான விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் போட்டியில் கலந்துகொள்வர்.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 304 விளையாட்டாளர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் 27 விளையாட்டுகளில் போட்டியிடுவர்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்