தென் கொரிய அணி...வட கொரியாவின் தேசிய கீதம்
SNTV via AP/OCA
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் தென் கொரியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஹாக்கி ஆட்டம்...
ஆட்டம் தொடங்குவதற்கு முன் இருநாட்டின் தேசிய கீதமும் ஒலிக்கப்படவேண்டும்...
தென் கொரியாவின் தேசிய கீதத்துக்குப் பதில் வட கொரியாவின் தேசிய கீதம் ஒலித்தது.
தவற்றை உணர்ந்த விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் பங்களாதேஷின் தேசிய கீதத்துக்குப் பின் தென் கொரியாவின் தேசிய கீதத்தை ஒலித்தனர்.
ஆட்டமும் தொடங்கியது.
தென் கொரிய அணி 5க்கு 0 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டுகளின் ஏற்பாட்டாளர்கள் தென் கொரியப் பிரதிநிதிகளிடமும் அதிகாரிகளிடமும் மன்னிப்புக் கேட்டனர்.
தவறு மீண்டும் நேராது என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
"இது பெரும் பிரச்சினை. இந்தத் தவறு நடந்திருக்கக்கூடாது," என்று தென் கொரிய அணியின் பயிற்றுவிப்பாளர் கூறினார்.
ஆசிய விளையாட்டுகள் ஜப்பானில் நடைபெறுகின்றன.
நேற்றுத் தொடங்கிய போட்டிகள் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீடிக்கும்.
தங்குமிடங்கள், விளையாட்டாளர்களுக்குக் கிடைத்த வரவேற்புக் குறித்துப் புகார்கள் எழுந்துள்ளன.
சில குழுக்கள் விமான நிலையத்தில் 6 மணி நேரம் வரை காத்திருக்கவேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.