Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு நகரத்தையே தரைமட்டமாக்கக்கூடிய சிறு கோள் நெருங்குகிறது... ஆனால் ஆபத்தில்லை

வாசிப்புநேரம் -

ஒரு நகரத்தையே தரைமட்டமாக்கக்கூடிய சிறு கோள் பூமியை நெருங்குகிறது.

அது ஆபத்து ஏதும் ஏற்படுத்தாமல் பூமிக்கும் நிலவின் வட்டப்பாதைக்கும் நடுவே கடந்து செல்லும்.

2023 DZ2 எனும் சிறு கோள் அமெரிக்க நேரப்படி நாளை (25 மார்ச்) பிற்பகல் மணி 3.50க்குப் பூமிக்கு ஆக அருகில் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அப்போது சிறு கோள் பூமியிலிருந்து 168,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தில் அது பாதி.

அதன் விட்டம் 40 மீட்டருக்கும் 90 மீட்டருக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியது.

அத்தகைய சிறு கோள்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே செல்வதுண்டு என்றும் அது குறிப்பிட்டது.

ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்