Skip to main content
உலகக் கிண்ண ஆட்டத்தில் நட்சத்திரப் பட்டாளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகக் கிண்ண ஆட்டத்தில் நட்சத்திரப் பட்டாளம்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண ஆட்டத்தில் நட்சத்திரப் பட்டாளம்

(படம்: Valerie MACON / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

FIFA உலகக் கிண்ணப் போட்டி மிகவும் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

போட்டியை ஏற்று நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இன்று தொடக்க விழாவும் 'D' பிரிவின் முதல் குழுச்சுற்று ஆட்டமும் நடந்தன.

லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) உள்ள சோஃபை (SoFi) விளையாட்டரங்கில் திரண்ட ரசிகர்களுக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி.

கண்கவரும் தொடக்க விழாவில் பங்குபெற்ற நட்சத்திரங்கள் ஒருபுறம்:

- அமெரிக்கப் பாடகி கேட்டி பேரி (Katy Perry)
- ராப் (rap) இசைப் பாடகர் ஃபியூச்சர் (Future)
- தென்னாப்பிரிக்கப் பாடகி டைலா (Tyla)
- பிரேசிலியப் பாடகி அனிட்டா (Anitta)
- தென்கொரிய K-pop நட்சத்திரம் லிசா (Lisa)
 
Related article image
(படம்: REUTERS/Lisi Niesner)
Related article image
(படம்: Patrick T. Fallon / AFP)
மறுபுறம் அமெரிக்காவும் பராகுவேயும் மோதிய ஆட்டத்தைக் காண வந்திருந்தனர் மேலும் பல பிரபலங்கள்.

பிரபலத் திரைப்பட நடிகர்கள் டாம் குரூஸ் (Tom Cruise), லியோனார்டோ டிகேப்ரியோ (Leonardo DiCaprio), ஹேலி பெரி (Halle Berry), 'ஸ்டார் வார்ஸ்' (Star Wars) இயக்குநர் ஜார்ஜ் லுக்கஸ் (George Lucas) ஆகியோர் வருகை தந்தனர்.

அவர்களுடன் முன்னாள் காற்பந்து வீரர் டேவிட் பெக்கம் (David Beckham), மைக்ரோசோப்ட் (Microsoft) நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), ஊடகப் பிரபலம் பாரிஸ் ஹில்ட்டன் (Paris Hilton), முன்னாள் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆகியோரும் அரங்கத்தில் காணப்பட்டனர்.
 
Related article image
(படம்: REUTERS/Matthew Childs
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது.

உலகக் கிண்ணப் போட்டி ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா 4 கோல்கள் போட்டது இதுவே முதல் முறை.


FIFA உலகக் கிண்ணம் 2026 போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் காண mewatch.sg/fifaworldcup இணையப்பக்கத்தின் மூலம் பதிவு செய்யுங்கள்.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்