பூமிக்குப் புறப்பட்டனர் விண்வெளியில் 9 மாதம் சிக்கியிருந்த விண்வெளி வீரர்கள்
வாசிப்புநேரம் -
(படம்: NASA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
விண்வெளியில் சிக்கியிருக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் (Butch Wilmore), சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) இருவரும் இன்று (18 மார்ச்) பின்னிரவு பூமிக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பூமியைவிட்டுப் புறப்பட்டனர்.
அவர்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் எட்டு நாள் இருப்பார்கள் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அந்த எட்டு நாள் ஒன்பது மாதமாக மாறியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஞ்ஞானிகள் இருவரையும் விண்வெளி நிலையத்தில் விட்டுவிட்டு Starliner விண்கலம் காலியாகத் திரும்பியது.
சிங்கப்பூர் நேரப்படி அவர்கள் இன்று பிற்பகல் SpaceX Dragon விண்கலத்தில் இருந்து புறப்பட்டனர். சுமார் 12 மணி நேரத்தில் அவர்கள் பூமியை வந்தடைவர்.
விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தில் பூமியின் வட்டப்பாதைக்குள் வரும் கடைசிக் கட்டப் பயணமே கடுமையாக இருக்கும். 1,600 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை விண்கலம் தாங்க வேண்டியிருக்கும்.