Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மூவகைப் போட்டியில் கலந்துகொண்ட விளையாட்டாளர் நீச்சல் அங்கத்தின்போது மரணம்

வாசிப்புநேரம் -
இங்கிலாந்தின் சுவான்சீ நகரில் (Swansea) மூவகைப் போட்டியில் பங்கெடுத்த 61 வயது விளையாட்டாளர் நீச்சல் அங்கத்தின்போது உயிரிழந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

போட்டிக்கு ஏற்பாடு செய்த Activity Wales Events அமைப்பு, விளையாட்டாளரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

நேற்று முன்தினம் (28 மே) நடந்த போட்டியில் சுமார் 1,500 விளையாட்டாளர்கள் கலந்துகொண்டதாக BBC தெரிவித்தது.

அங்கு உதவியளிக்கக் காவல்துறை, வேல்ஸ் அவசர மருத்துவ வண்டிச் சேவை, St John அவசர மருத்துவ வண்டிச் சேவை ஆகியவை வந்திருந்தன.

இறந்த விளையாட்டாளருக்கு உதவி செய்த அனைவருக்கும் Activity Wales Events அமைப்பு Facebook பதிவில் நன்றி தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்