Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலிய வெள்ளத்தில் 7 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் பெருகிய திடீர் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 7க்கு உயர்ந்துள்ளது.

பிரிஸ்பேன் (Brisbane) நகரில் கார்களும் கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

1,400க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததாக நம்பப்படுகிறது.

பல்லாயிரம் வீடுகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலை ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நகரில் உயர்ந்துவரும் நீர்மட்டம் அந்த வட்டாரத்தில் வெள்ளத்தை அதிகரிக்கும் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

தென்கிழக்கு மாநிலமான குவீன்ஸ்லந்தில் (Queensland) எந்நேரமும் பெருமழை கொட்டித் தீர்க்குமென வானிலை ஆய்வக அதிகாரிகள் எச்சரித்தனர்.

தற்போது அங்கே கடுமையான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் மட்டும் 6 பேர் மாண்டனர்.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஆடவர் ஒருவர் மாண்டார்.

இதமான சூரிய வெளிச்சத்துக்குப் பெயர்பெற்ற Gold Coast, Sunshine Coast கடற்கரைகள் சுற்றுப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளன.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்