Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியா ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 35,000 நிரந்தரக் குடியேறிகளை வரவேற்கத் திட்டமிட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றின்போது தற்காலிக விசா வைத்திருந்தவர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேடச் சிரமப்படுகின்றன.
 
உணவகங்கள், மதுபானக் கூடங்கள், ஹோட்டல்கள் ஆகியவை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டின் உபசரிப்புத் துறையில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

விசா நடைமுறையை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்துவந்தாலும் பாதிக்கப்பட்ட வேலையிடங்கள் மீண்டு வருவதற்குப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

மாணவர்கள், சுற்றுப்பயணிகள், வேலை அனுமதி விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகின்றனர். 

ஆனால் அவர்களின் வருகை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குச் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்