Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

DeepSeek செயலியை அரசாங்கச் சாதனங்களில் பயன்படுத்தத் தடை விதித்த ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -
 DeepSeek செயலியை அரசாங்கச் சாதனங்களில் பயன்படுத்தத் தடை விதித்த ஆஸ்திரேலியா

(கோப்பு படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவுச் செயலியை அரசாங்கச் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

இணையப் பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்பட்டது. DeepSeekஇல் தரவுப் பாதுகாப்பின்மை, நச்சு மென்பொருள் முதலிய ஆபத்துகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

சென்ற மாதம் Deepseek செயலி வெளியிடப்பட்டது. அது தொழில்நுட்பத் துறையிலும் பங்குச் சந்தையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ் உட்பட பல நாடுகள் DeepSeekஇன் பாதுகாப்பு, தரவுக் கட்டுப்பாடுகள் குறித்து அக்கறை தெரிவித்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் முடிவு முழுக்க முழுக்கப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மட்டுமே எடுக்கப்பட்டது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று அரசாங்க இணைப் பாதுகாப்புத் தூதர் அண்ட்ரூ சார்ல்ட்டன் (Andrew Charlton) கூறினார்.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்