Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீன வேவுக் கப்பல் அத்துமீறியது: ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடலோரம், சீன வேவுக் கப்பல் காணப்பட்டதைத் தொடர்ந்து அமைதியாக இருப்பது முக்கியம் என்று கான்பரா (Canberra) கூறியிருக்கிறது. 

சீன வேவுக்கப்பல் தனது கடல் எல்லைக்குள் வந்தது அத்துமீறல் என்றும் கவலைக்குரியது என்றும் ஆஸ்திரேலியா கூறியது. 

சீனாவின் உயர்தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட கப்பல் ஆஸ்திரேலியாவின் ராணுவ, உளவு நிலைகளுக்குப் பக்கத்தில் காணப்பட்டது. 

அவை அமெரிக்காவுக்கும் மற்ற நட்பு நாடுகளுக்கும் ஆதரவாக இயங்குபவை. 

அத்தகைய அத்துமீறல் தொடர்ந்து பலமுறை நடக்கும் சாத்தியம் இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் (Scott Morrison) கூறினார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்