Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் கூடிய விரைவில் 4ஆம் தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்படும்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரத்திலிருந்து கோவிட்-19 தடுப்பூசியை 4ஆவது முறையாகப் போடும் பணி விரிவுபடுத்தப்படுகிறது. 

எளிதில் பரவக்கூடிய B-A-4, B-A-5 வகை ஓமக்ரான் கிருமியால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது.

வரும் திங்கட்கிழமையிலிருந்து 30 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோரும் 4ஆவது முறையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

புதிய மாற்றத்தால் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் 2ஆவது booster தடுப்பூசியைப் போடத் தகுதிபெறுவர்.

இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது கடும் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மட்டும் அந்தத் தெரிவு வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 4ஆயிரம் பேர் கோவிட்-19 கிருமியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைப் பொறுத்தவரை, கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அதுவே ஆக அதிக எண்ணிக்கை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்