ஆஸ்திரேலியா: வெள்ளத்தால் உயர்விழிப்பு நிலையில் நியூ சௌத் வேல்ஸ்

AFP/Saeed Khan
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் வெள்ளத்தால் உயர்விழிப்பு நிலையில் உள்ளது.
மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் இரவில் கனத்த மழை பெய்திருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் சில வட்டாரங்களைச் சென்றடைய முடியவில்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் வெளியேறத் தயாராக இருக்கும்படி அந்த வட்டாரங்களில் வசிப்போருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதிவரை மோசமான வானிலை தொடரக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.