Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மோசமடையும் வெள்ளம்

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் வெள்ளம் அதிகரித்துவருவதால் சுமார் 500,000 பேர் வெளியேறத் தயாராயிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் ஒருவாரமாக இடைவிடாத அடைமழை.

குவீன்ஸ்லந்திலும் (Queensland) நியூ செளத் வேல்ஸிலும் (New South Wales) 13 பேர் மாண்டனர்.

வெள்ள நிலவரம் மோசமடைவதற்குள், வெளியேற்ற உத்தரவை மதித்து நடக்குமாறு நியூ சௌத் வேல்ஸ் மாநில முதலமைச்சர், மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

சில ஆறுகள் கரை மீறிப் பாயக்கூடும்.

சிட்னியின் சில பகுதிகளிலும் அருகிலுள்ள சில வட்டாரங்களிலும் ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்