Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்: அதிகாரிகள் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்: அதிகாரிகள் எச்சரிக்கை

படம்: AFP PHOTO / AUSTRALIAN DEFENCE FORCE

ஆஸ்திரேலிய அதிகாரிகள் வார இறுதியில் இன்னும் அதிகமான மழை பெய்வதுடன் வெள்ளமும் பெருக்கெடுக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அதனால் மீட்பு, நிவாரணப் பணிகள் பாதிக்கப்படக்கூடும்.

கடந்த ஒரு வாரத்தில், குவீன்ஸ்லந்து, நியூ செளத் வேல்ஸ் மாநிலங்களில் கிட்டத்தட்ட ஓராண்டில் பெய்யவேண்டிய மழை கொட்டியது.

வெள்ளத்தில் 13 பேர் மாண்டனர்.

நீர் பின்வாங்கும்போது மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

வீடுகளை விட்டு வெளியேறும்படி பொதுமக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சிட்னி நகரிலும் அதைச் சுற்றியும் உள்ள சில ஆறுகள் கரை மீறிப் பாயக்கூடும் என்று கருதப்படுகிறது.

வானிலை ஆய்வகம், மணிக்குக் கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்தது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்