Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டக்கூடிய பட்டறை - ஆஸ்திரேலியாவின் $2.7பி முதலீடு

வாசிப்புநேரம் -
அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டக்கூடிய பட்டறை - ஆஸ்திரேலியாவின் $2.7பி முதலீடு
(கோப்புப் படம்: COLIN MURTY/Pool via REUTERS)
ஆஸ்திரேலியா அணுவாற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டக்கூடிய பட்டறையை அமைப்பதற்கு 2.7 பில்லியன் டாலரை (சுமார் 3.4 பில்லியன் வெள்ளி) முதலீடு செய்யவிருக்கிறது.

கட்டுமானத்திற்கான ஆரம்பத் தொகை அது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றுடனான முத்தரப்புத் தற்காப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அந்த முதலீடு.

ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் இணைந்து புதிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும்.

ஆஸ்திரேலியாவின் அடிலேய்ட் (Adelaide) நகரில் கப்பல் பட்டறை அமையும்.

அதன் கட்டுமானத்திற்கு மொத்தம் 21 பில்லியன் டாலருக்கு (சுமார் 26.5 பில்லியன் வெள்ளி) மேல் செலவாகும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனை 2032ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் வட்டாரத்தில் நெடுந்தொலைவுக்குத் தாக்கும் தனது ஆற்றலை வலுப்படுத்த அந்தக் கப்பல்கள் உதவும் என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

இது ஆஸ்திரேலியாவின் தற்காப்புப் பற்றியது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக விளங்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்