Skip to main content
ஆஸ்திரேலிய தேசிய தினத்தன்று வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆஸ்திரேலிய தேசிய தினத்தன்று வெடிகுண்டுத் தாக்குதல் முயற்சி - பயங்கரவாதச் செயல்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தும் முயற்சி பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் பெர்த் (Perth) நகரில் ஜனவரி 26ஆம் தேதி நடந்தது.

அதன் தொடர்பில் 31 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் வீட்டில் செய்யப்பட்ட வெடிகுண்டைப் பல்லாயிரம் பேர் கூடியிருந்த இடத்தில் வீசியதாகக் கூறப்பட்டது.

வெடிகுண்டு வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களில் 2 முக்கியக் குழுக்கள் உள்ளன. அதில் ஒன்றை அவர் தாக்க முயற்சி செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

1788ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டைக் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததை ஆஸ்திரேலிய தினம் அனுசரிக்கிறது.

பழங்குடிச் சமூகத்தினர் உட்படச் சிலர் அந்த நாளன்று ஆர்ப்பாட்டங்களை நடத்துவர்.

அன்றைய தினம் தங்கள் நாடு ஊடுருவப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்