Skip to main content
சாலையில் கடல்சிங்கம் அட்டகாசம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

சாலையில் கடல்சிங்கம் அட்டகாசம்

வாசிப்புநேரம் -
சாலையில் கடல்சிங்கம் அட்டகாசம்

(படம்: Instagram / Gopi_Chadha)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா சாலைகளில் கடல்சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்கிறது.

அதன் பெயர் நீல் (Neil); வயது ஐந்து.

நீலின் எடை 1,000 கிலோகிராம்.

நீலுக்கென்று ஒரு தனி Tik Tok பக்கம் உண்டு.

அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நீல் அவ்வப்போது கரைக்கு வருவது வழக்கம்.

அது சாலையில் படுத்திருக்கும் காட்சி தற்போது இணையத்தில் பரவுகிறது.

நீல் பொது இடத்தில் சேதம் விளைவித்தது.

வனவிலங்கு அதிகாரிகள் நீலைச் சாலையிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த முயன்றனர்.

மக்களிடையே வாழ்வது நீலுக்குப் பழக்கமானால் அதன் ஆயுள்காலம் குறையலாம்.

கடல்சிங்கத்தைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

விலங்கிடமிருந்து விலகியிருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்