Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் முதல் குரங்கம்மைச் சம்பவம்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் முதல் குரங்கம்மைச் சம்பவம்
படம்:  AFP

ஆஸ்திரேலியாவில் முதல் குரங்கம்மைச் சம்பவம் பதிவாகியிருக்கிறது. 

அண்மையில் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணி ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 

30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட அந்த அடவர் பிரிட்டனிலிருந்து மெல்பர்ன் சென்றவர்.

மற்றொருவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவர் சிட்னியில் இருக்கிறார். 40 வயதைத் தாண்டிய அவரும், அண்மையில் ஐரோப்பா சென்று  திரும்பியவர். 

இருவருக்கும் அறிகுறிகள் மிதமாக இருப்பதாய் விக்டோரியா மாநிலத்தின் சுகாதாரப் பிரிவு கூறியது. 

ஆனால் தொற்று பரவும் விதம், கோவிட்-19 போல் இருக்காது என்று மக்களுக்கு வலியுறுத்த விரும்புவதாய்ச் சுகாதாரப் பிரிவு சொன்னது. 

ஏற்கெனவே பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கம்மைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்