Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்...காரணம்?

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் COVID-19 கிருமிப்பரவலின்போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

COVID-19 கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும்  அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது.

கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்