Skip to main content
ஆஸ்திரேலியத் துப்பாக்கிச் சட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆஸ்திரேலியத் துப்பாக்கிச் சட்டம் - மக்களவை ஒப்புதல்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியத் துப்பாக்கிச் சட்டம் - மக்களவை ஒப்புதல்
படம்: AFP/Saeed Khan
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து செனட்சபை அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் சட்டத்துக்கும்
துப்பாக்கி உரிமங்களுக்கான பின்னணிச் சோதனைகளைக் கடுமையாக்கும் சட்டத்துக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது. கடந்த மாதம் 14ஆம் தேதி போண்டாய்க் கடற்கரையில் யூதத் திருவிழாவில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன. உளவுத்துறை வசமுள்ள தகவல்களைக் கொண்டு துப்பாக்கி உரிமங்களைப் பெறுவோரின் பின்னணி சோதிக்கப்படும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆக அதிகமாக 4 மில்லியன் துப்பாக்கிகள் இருந்ததாக அரசாங்கம் தெரிவித்தது. அவற்றில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவை, போண்டாய் தாக்குதல் நடந்த, நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் உள்ளன.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்