Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் Code Brown அவசரநிலை

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் Code Brown அவசரநிலை

(படம்: AP)

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில வாரங்களில் இன்னும் கூடுதலானோர் கிருமித்தொற்றால் மடியக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ஓமக்ரான் நோய்ப்பரவல் மோசமாகியுள்ளது.

மருத்துவமனைகள் மீதான சுமை அதிகரித்துள்ளதால் விக்டோரியா மாநிலத்தில் அவசரநிலை Code Brownக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்கமாக, இயற்கைப் பேரிடர், பெரிய அளவில் மக்கள் மாண்டுள்ள சம்பவங்கள் ஆகியவற்றின்போதே அவசரநிலை Code Brownக்கு உயர்த்தப்படும்.

அண்டை மாநிலமான நியூ சௌத் வேல்ஸில், சுகாதாரத்துறை ஊழியர் பற்றாக்குறையை எதிர்த்து தாதியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருமித்தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், நோய்ப்பரவலோடு வாழும் முடிவை ஆஸ்திரேலியா நியாயப்படுத்த முயல்கிறது.

மிதமான அறிகுறிகளைக் கொண்ட ஓமக்ரான் வகையையும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையையும் அது சுட்டியது.

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியாவில் சுமார் 1.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,800க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்